• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ பிரதம குரு ஜெயந்திநாதக்குருக்கள் காலமானார்

Dez. 27, 2020

🌹சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் 🌹
தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020

நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குருவும், கைதடி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவ குருவும், சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ குருவுமாகிய நீர்வைகுருமணி
சிவஸ்ரீ சந்திரசேகரக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்கள் அவர்கள் 26/12/2020இல் சிவசாயுஜ்யம் அடைந்துவிட்டார்.
குருக்கள் ஐயா அவர்களது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அனைவரோடும் அன்பாக பேசுவதிலும் ஆசிர்வதிப்பதிலும் அருள்நிறைந்த குருவாக திகழ்ந்த ஐயா அவர்களது மறைவு அனைவரையும் மிகவும் கவலை கொள்ள வைத்துள்ளது. ஐயா அவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவுகளுடனும் நாமும் துயர் பகிர்வதுடன் குருக்கள் ஐயா அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வாய்க்காற்தரவை விநாயகப்பெருமான் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்.

குருக்கள் ஐயா அவர்களது
இறுதிக்கிரியைகள் 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை இன்று 2.00 மணியளவில் இடம்பெறும்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed