சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ பிரதம குரு ஜெயந்திநாதக்குருக்கள் காலமானார்
ð¹சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் ð¹தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020 நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குருவும், கைதடி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவ குருவும், சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ குருவுமாகிய நீர்வைகுருமணிசிவஸ்ரீ…
இன்று சுவிஸ் திரு.இ.நேமிநாதன் வழங்கிய வெள்ள அனர்த்த உதவி
சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த திரு இராசலிங்கம் நேமிநாதன் (இ.நேமி) அவர்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக ரூபா 45,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 15 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் க.சத்தியதாஸ் ஊடாக இன்று 22.12.2020 வழங்கிவைக்கப்பட்டது.
சுவிஸ் வாழ் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா அவர்களினால் வழங்கப்பட்ட உதவி
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கான தலா 2750 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதிகள் சுவிஸில் வாழ்ந்துவரும் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா (சுவிஸ்) ஆகியோரின் அனுசரணையுடன் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்தினரால் (15-12-2020) அன்று வழங்கிவைக்கப்பட்டது